மனிதன் மனதில் தோன்றும் எண்ணங்கள் அளவிட முடியாதவை. சுய நலமிகுந்த மனிதன் தன்னலத்திற்காகவும், உயர்விற்காகவும் இறைவனிடம் வேண்டும் வேண்டுதல்கள் நமக்குத் தெரிந்தால், அவை நகைப்பிற்கும், சிந்திப்பதற்கும் இயைந்தனவாய் அமைவதை உணர்ந்து கொள்ள முடியும்.
"கடவுளே! இன்றைக்கு யாரும் இறந்து விடக்கூடாது? அப்படி இறந்துட்டா எல்.ஐ.சிக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும்" என்று சென்னை எல்.ஐ.சி. மேலாளரின் பிரார்த்தனை. மற்றொரு பக்கம்.
"இறைவா? ஒரு வாரமா யாரும் சாகலியே எனக்கு ஒரு வருமானம் கூட இல்லையே, இன்னைக்கு இந்தப் பகுதியில் ஒரு பிணம் உழட்டும்.' என்று க்ண்ணம்மாபேட்டை சுடுகாட்டு வெட்டியான் வேண்டுதல் மறுபக்கம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தேர்வு எழுதிய மாணவனின் தாய், "என் மகன் ஒவ்வொரு பாடத்திலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி வெற்றியடையனும் ..என்று இறைவனிடம் வேண்டுதல் மற்றொரு பக்கம்.
"இந்த ஆண்டு நிறைய மாணவர்கள் ஒரு சில பாடங்களில் தோல்வியடையனும்" என்று டுடோரியல் தலைவர் வேண்டுதல் மற்றொரு பக்கம்.
"ஆண்டவா மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. வீட்டில் யாருக்கும் எந்த வியாதியும் வரக்கூடாது" என்று தனது வருமானத்தில் குடும்பத்தை கரையேற்ற முயற்சிக்கும் தந்தையின் வேண்டுதல் ஒருபக்கம்.
"போன மாதம் நோயாளிங்க என்னோடு கிளினிக் பக்கத்துல தலைகாட்டல, வருமானமும் குறைவு. இந்த மழை சீசன்ல நிறைய பேருக்கு வியாதி ஏற்பட்டு என்னோட கிளினிக்கிற்கு வரவேண்டும்" என்றுதீவிர பிரார்த்தனையில் ஈடுப்பட்டார் மருத்துவர்.
"ரோட்டுல நடக்கிற விபத்தில் யாருக்கும், எலும்பு முறிவோ, வண்டிகளுக்கு சேதமோ ஏற்படக்கூடாது" என்று நியூ இந்தியா இன்சூரன்ஸ் மேலாளரின் வேண்டுதல் ஒருபக்கம்
ஒரு எலும்பு சிகிச்சை நிபுனர், "யாராவது இன்றைக்கு கால், கை, எலும்பு முறிந்து வரட்டும்" என்று அவரின் வேண்டுதல் மறுப்பக்கம்.
இப்படி ஒவ்வொருவருடைய வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் சுயனலத்துடன் இருக்கும் போது எப்படி எல்லோருடைய எண்ணங்களும் இணைந்து வெற்றியை எட்டப்போகின்றன? பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும் பொதுவானதாக இருக்கட்டும். பொது நன்மைகளை உலக நலன்களை மட்டும் சிந்திக்கின்ற போது, துன்ப மலைகள் தூசிகளாய் போகும். அப்போது தான் மனிதன் மனிதனாகிறான்.